Saturday, January 14, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 3

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் ...

2 மாலைக்கு மாலை காதலன் பேசும் பேச்சுக்கள் பேசிட வேண்டும்....

3. எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ பிறக்கும் ஜென்மங்கள் ...

4. வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும் ...

5. தென்றல் தாலாட்ட தென்னை இருக்க ...

6. ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால் தான் நனவுகள் ஆகும் ...

7. என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய் அதில் என்னென்ன வண்ணங்கள் ...

8. ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க வைத்தான்...

9. மனம் கங்கை நதியான உவமை ...

10. பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் ...

11. விழிகளே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா...

12. எந்தன் மனக்கோயில் சிலையாக அமர்ந்தாள் ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

14 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

இதென்ன கலாட்டா,

2.இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.
4.ஓராயிரம் பார்வையிலே
6.வெற்றி மீது வெற்றி வந்து
11.தோகை இளமயிலாடி வருகுது
12.என்னை யாரென்று எண்ணி எண்ணி

இப்போதைக்கு இது போதுமா?

மதுமிதா said...

3.பூவண்ணம் போலநெஞ்சம்

மதுமிதா said...

5.மயிலே மயிலே உன் தோகை எங்கே

பினாத்தல் சுரேஷ் said...

1. தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் - ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி

3.எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ பிறக்கும் ஜென்மங்கள் - பூவண்ணம் போல நெஞ்சம்

8. ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க வைத்தான்... - உன்னைச்சொல்லி குற்றமில்லை, என்னைச்சொல்லிக் குற்றமில்லை

பினாத்தல் சுரேஷ் said...

atataa.. mathumithaa 3le munthikitaanggalee!

மதுமிதா said...

1.ஏதோ நினைவுகள் கனவுகள்

Jayaprakash Sampath said...

1. ஏதோ நினைவுகள் - அகல் விளக்கு
2. இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது - ?
5. மயிலே மயிலே உன் தோகை எங்கே - கடவுள் அமைத்த மேடை

பாலாஜியின் மிரட்டலுக்குப் பயந்து மூன்றோடு நிறுத்திக் கொள்கிறேன். :-)

மதுமிதா said...
This comment has been removed by a blog administrator.
rajkumar said...

7.muthaduthe muthaduthe ragam- nalavannukku nalavan

Balloon MaMa said...

பலா,
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தில் அன்பும் , வளமும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்
கல்வெட்டு

enRenRum-anbudan.BALA said...

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், குறிப்பாக 'பல்லவியும் சரணமும்' போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்கும் நண்பர்களுக்கு :)

கல்வெட்டு,
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

ஒரே ஒரு பல்லவி --- யாரும் கண்டுபிடிக்கவில்லை!

10. பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் --- ஏதோ மனிதன் பிறந்து விட்டான், அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் --- பனித்திரை

பாடல்களின் படங்கள்:
2. இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது --- வல்லவன் ஒருவன்
3. பூவண்ணம் போல நெஞ்சம் --- அழியாத கோலங்கள்
4. ஓராயிரம் பார்வையிலே --- ஜெய்சங்கர் படம் ????
6. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் --- எம்ஜியார் படம் ???
8. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை --- குலமகள் ராதை
11. தோகை இளமயில் ஆடி வருகுது --- பயணங்கள் முடிவதில்லை
12. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் --- பாலும் பழமும்

மீண்டும் சந்திப்போம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

ஜோ/Joe said...

//4. ஓராயிரம் பார்வையிலே --- ஜெய்சங்கர் படம் ????//
vallavanukku vallavan
6. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் --- எம்ஜியார் படம் ???
thedi vantha maapillai

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails